Home கலை உலகம் குலு மணாலியில் கார்த்தி படக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு

குலு மணாலியில் கார்த்தி படக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு

880
0
SHARE
Ad

சிம்லா – இமாச்சலப் பிரதேசத்திலுள்ள குலு மணாலி பிரதேசம் கடும் மழை, திடீர் வெள்ளம் காரணமாக மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு படப்பிடிப்புக்காகச் சென்ற நடிகர் கார்த்தியின் ‘தேவ்’ படக் குழுவினர் அந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

140 பேர் கொண்ட படக் குழுவினர் குலு மணாலி வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

வெள்ளத்தின் காரணமாக மோசமாகப் பாதிப்படைந்துள்ள சாலைகள் செப்பனிடப்பட்டு வருவதன் காரணமாக, படக்குழுவினர் சென்னை திரும்ப ஓரிரு நாட்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.