Home உலகம் உலகின் சிறந்த விளையாட்டாளர் விருதை இழந்தார் ரொனால்டோ

உலகின் சிறந்த விளையாட்டாளர் விருதை இழந்தார் ரொனால்டோ

1341
0
SHARE
Ad
லுக்கா மோட்ரிக் – மார்த்தா

இலண்டன் – நேற்று திங்கட்கிழமை இரவு இலண்டனில் நடைபெற்ற பிஃபா எனப்படும் (FIFA) உலகக் காற்பந்து சம்மேளனத்தின் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டின் உலகிலேயே சிறந்த காற்பந்து விளையாட்டாளராக குரோஷியா நாட்டின் விளையாட்டாளர் லுக்கா மோட்ரிக் முடிசூட்டப்பட்டார்.

2007-ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டின் காக்கா என்ற விளையாட்டாளர் சிறந்த காற்பந்து வீரர் பட்டத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன்பின்னர் போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி என இருவர் மட்டுமே மாறி மாறி ஆண்டுதோறும் இந்த விருதை வென்று வந்துள்ளனர்.

இப்போதுதான் முதன் முறையாக இவர்கள் இருவரையும் தவிர்த்து இன்னொருவர், 33 வயதான லுக்கா மோட்ரிக் –  உலகின் சிறந்த காற்பந்து விளையாட்டாளராக முடி சூட்டப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

லுக்கா மோட்ரிக் (படம்), கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவருமே ரியல் மேட்ரிட் காற்பந்து குழுவின் விளையாட்டாளர்களாக விளையாடியவர்கள் ஆவர்.

பெண்கள் பிரிவில் சிறந்த காற்பந்து விளையாட்டாளராக பிரேசில் நாட்டின் மார்த்தா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் இந்த விருதைப் பெறுவது இது ஆறாவது முறையாகும்.

மோட்ரிக் சிறந்த விளையாட்டாளர் விருதைப் பெற்ற நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் இரண்டாவதாக ரொனால்டோவும், லிவர்புல் விளையாட்டாளர் முகமட் சாலா மூன்றாவதாகவும், பிரான்ஸ் நாட்டின் கைலியான் மாப்பே நான்காவதாகவும், லியோனல் மெஸ்ஸி ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.

பிஃபாவின் சிறந்த பயிற்சியாளர் விருதை பிரான்ஸ் நாட்டின் டிடியர் டாஸ்சாம்ப்ஸ் பெற்றார்.