Home உலகம் ஈரோ 2020 : போர்ச்சுகல் 3 – ஹங்கேரி 0 : கிறிஸ்டியானோ ரோனால்டோ திறனைக்...

ஈரோ 2020 : போர்ச்சுகல் 3 – ஹங்கேரி 0 : கிறிஸ்டியானோ ரோனால்டோ திறனைக் காட்டினார்

1064
0
SHARE
Ad

புடாபெஸ்ட் (ஹங்கேரி) : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) நள்ளிரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் போர்ச்சுகல்-ஹங்கேரி இரு நாடுகளும் களமிறங்கின.

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல்கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது. போர்ச்சுகல் குழுவின் தலைவராக (கேப்டனாக) செயல்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் தனது காற்பந்து திறனைக் காட்டினார்.

#TamilSchoolmychoice

ஒரு பினால்டி வாய்ப்பு கிடைக்க அதைக் கோலாக்கினார் ரொனால்டோ. அதே வேளையில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருக்கும் வேளையில் போர்ச்சுகல் குழுவின் 3-வது கோலையும் ரொனால்டோ அடித்தார்.

கடந்த 2016-இல் நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளின் வெற்றியாளரான போர்ச்சுகல் குழுவின் முகமாக அறியப்படுபவர் உலகப் புகழ் பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இந்த ஆண்டும் ரொனால்டோ போர்ச்சுகல் குழுவில் இடம் பெற்றிருப்பதாலும், தொடர்ந்து தனது திறனை வெளிப்படுத்தி வருவதாலும், மீண்டும் போர்ச்சுகலை வெற்றி வாகை சூடும் அளவுக்கு ரொனால்டோ வழி நடத்தி செல்வாரா என்ற ஆர்வம் போர்ச்சுகல் காற்பந்து இரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

இதுவரையில் 5 ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் பங்கு பெற்ற ஒரே காற்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரோனால்டோ திகழ்கிறார்.