Home உலகம் ஈரோ 2020 : பிரான்ஸ் 1 – ஜெர்மனி 0; முதல் ஆட்டத்திலேயே தோல்வி கண்ட...

ஈரோ 2020 : பிரான்ஸ் 1 – ஜெர்மனி 0; முதல் ஆட்டத்திலேயே தோல்வி கண்ட ஜெர்மனி

960
0
SHARE
Ad

மூனிக் (ஜெர்மனி) : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று புதன்கிழமை (ஜூன் 16) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி-பிரான்ஸ் இரு நாடுகளும் களமிறங்கின.

ஜெர்மனியின் மூனிக் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. எஃப் (F) பிரிவுக்கான ஆட்டம் இதுவாகும்.

இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் மிகக் கடுமையானப் போட்டிகளைக் காணப்போகும் பிரிவு எஃப் (F) பிரிவாகும்.

உலகின் மிகச் சிறந்த குழுக்களில் ஒன்றாகவும், ஐரோப்பியக் கிண்ணத்தைக் கடந்த காலங்களில் பல முறை வெற்றி கொண்ட நாடுகளாகவும் திகழும் ஜெர்மனியும், பிரான்சும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றன. போதாக் குறைக்கு வலிமை வாய்ந்த போர்ச்சுகலும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கிறது. ஹங்கேரியும் இடம் பெற்றிருக்கிறது.

இதுவரை ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளுக்கான எந்த தொடக்க ஆட்டத்திலும் தோல்வியடையாத ஜெர்மனி இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதன் முறையாகத் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எஃப் (F) பிரிவுக்கான மற்றொரு ஆட்டத்தில் போர்ச்சுகல் 3-0 கோல் எண்ணிக்கையில் ஹங்கேரியைத் தோற்கடித்தது.

எஃப் (F) பிரிவில் இனிவரும் ஆட்டங்களில் மூன்று காற்பந்து ஜாம்பவான்களான ஜெர்மனி, போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் குழுக்களில் ஒரு குழு பின்தங்க நேரிடும். இரண்டு குழுக்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.

இன்றைய நிலையில் போர்ச்சுகல், பிரான்ஸ் இரண்டுமே தங்களின் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்று முன்னணியில் இருக்கின்றன.

முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ஜெர்மனி இனி ஹங்கேரியையும், போர்ச்சுகலையும் அடுத்தடுத்து வெற்றி கொண்டால்தான் அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும்.