இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்கா ஈரான் போர் குறித்து முடிவெடுக்கும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த முடிவு இஸ்ரேலுக்குப் பின்னடைவு எனக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், மலேசியர்கள் அனைவரும் ஈரானிலிருந்து வெளியேற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள மலேசிய வெளியுறவு அமைச்சு அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.
மற்ற நாடுகளும் இதே போன்று தங்கள் நாட்டு குடிமக்களை ஈரானிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா, ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் இந்தியர்களை ஈரானிலிருந்து கட்டம் கட்டமாக வெளியேற்றி வருகிறது.
எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி, ஈரானில் நிலைமை மேலும் மோசமாகலாம் எனக் கருதப்படுகிறது.
ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகமும் விரைவில் தற்காலிகமாக மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானிலிருந்து வெளியேறும் மலேசியர்களுக்கு டெஹ்ரானிலுள்ள மலேசியத் தூதரகம் எல்லாவித உதவிகளையும் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.