Home உலகம் ஈரோ 2020 : இங்கிலாந்து 1 – இத்தாலி 1; பினால்டி கோல்களில் இத்தாலி ஐரோப்பியக்...

ஈரோ 2020 : இங்கிலாந்து 1 – இத்தாலி 1; பினால்டி கோல்களில் இத்தாலி ஐரோப்பியக் கிண்ணத்தை வென்றது

789
0
SHARE
Ad

Euro-2020-8-teams-quarter-finalsஇலண்டன் : மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு கோலாகலமான நிறைவு விழாவோடு தொடங்கிய இங்கிலாந்து-இத்தாலி இடையிலான ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிக்கான இறுதிச் சுற்று ஆட்டத்தில் இத்தாலி வெற்றி பெற்றது.

கூடுதல் நேரம் வழங்கப்பட்டும் இரண்டு குழுக்களுமே 1-1 என சம நிலையிலேயே இருந்ததால் பினால்டிகளின் மூலம் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நிலைமை ஏற்பட்டது.

பினால்டி கோல்கள் அடிப்பதில் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் சொதப்பியதால் இறுதியில் இத்தாலி பினால்டிகளில் வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

இலண்டனின் பிரம்மாண்டமான வெம்பளி ஆரங்கில் ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து குழுவின் ஷா ஒரு கோல் போட இங்கிலாந்து முன்னணிக்கு வந்தது. அதன் பிறகு முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே கோல் எதுவும்  போட முடியவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் இத்தாலி ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்து, இத்தாலிய காற்பந்து இரசிகர்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்தது.

90 நிமிடங்கள் முடிந்தும் இரண்டு குழுக்களுமே கோல் எதுவும் போட முடியவில்லை. தாமதங்கள் காரணமாக நடுவர் 6 நிமிடங்கள் ஆட்ட நேரத்தை நீட்டித்தார். அப்போதும் கோல்கள் எதுவும் போட முடியாததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.

அந்தக் கூடுதல் நேரத்திலும் இரண்டு குழுக்களுமே தொடர்ந்து 1-1 என்ற நிலையில் நீடித்ததால் பினால்டிகளின் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்கும் முடிவு எடுக்கப்பட்டு, பினால்டி கோல்களில் இத்தாலி வெற்றி பெற்றது.