Home உலகம் ஜி-7 மாநாட்டில் மோடி!

ஜி-7 மாநாட்டில் மோடி!

266
0
SHARE
Ad

ரோம் : இத்தாலியில் நடைபெறும் ஜி-7 கூட்டமைப்பின் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி வந்தடைந்தார்.

அண்மையில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளோடு வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராகப் பதவியேற்றபின் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு வருகை இதுவாகும்.

உலகின் பணக்கார ஜனநாயக நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 என்பதாகும். இந்த நாடுகளின் தலைவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 13) முதல் இத்தாலியில் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

#TamilSchoolmychoice

மோடி, மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோன், உக்ரேன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

உக்ரேனுக்கு இராணுவ உதவி

ஜி-7 நாட்டுத் தலைவர்களின் பேச்சு வார்த்தைகளின் ஒரு பகுதியாக ரஷியாவுடனான போரில் பின்னடைவு சந்திருக்கும் உக்ரேனுக்கு உதவ அந்நாடுகள் முன்வந்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரேனுக்கான உதவிகளை வழங்குவதில் தலைமை வகிக்கிறார். ஜி-7 மாநாட்டின் இடைவேளையில் அவர் உக்ரேன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியை சந்தித்தார்.