சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்து மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் பாபநாசம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார்.
தற்போது, இவரது இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் தம்பி எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகி உள்ளது. முதன் முதலாக கார்த்தியும் ஜோதிகாவும் இணைந்து அக்கா தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இவர்களுக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.
உறவு, பாசம் உள்ளிட்ட அங்கங்களை முன்வைத்து படம் நகர்த்தப்பட்டிருக்கிறது. இம்முன்னோட்டக் காணொளியில் இடம்பெற்றுள்ள ‘அன்பு எல்லாத்தையும் மாற்றும்’ எனும் வசனம், இத்திரைப்படம் அன்பை மையப்படுத்தி நகர்த்தப்பட்டிருக்கலாம் எனும் தோற்றத்தை அளிக்கிறது.
தற்போது இரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்படும் இம்முன்னோட்டக் காணொளியை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்: