Home நாடு ஆஸ்ட்ரோ ‘கோலிவுட் குயின்ஸ் (அலைவரிசை 100)’ – புதிய அலைவரிசையைக் கண்டு மகிழுங்கள்

ஆஸ்ட்ரோ ‘கோலிவுட் குயின்ஸ் (அலைவரிசை 100)’ – புதிய அலைவரிசையைக் கண்டு மகிழுங்கள்

912
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தற்போது பிரபலமானத் தமிழ் திரைப்படங்களை புதியக் ‘கோலிவுட் குயின்ஸ் (அலைவரிசை 100)’ அலைவரிசையில் கண்டு மகிழலாம்.

டிசம்பர் 1, 2021 முதல் ஜனவரி 1, 2022 வரை தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் கிடைக்கப் பெறும் புதியக் ‘கோலிவுட் குயின்ஸ் (அலைவரிசை 100)’ பாப்-அப் அலைவரிசையைப் பற்றிய விபரங்கள்:

• ஆஸ்ட்ரோ தனது 25-வது ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடும் தருணத்தில் வாடிக்கையாளர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில், நயன்தாரா, சிம்ரன், த்ரிஷா மற்றும் ஜோதிகா ஆகிய நான்குப் பிரபலக் கோலிவுட் நடிகைகள் நடித்த 70 பிரபலமானத் திரைப்படங்களை ஒளியேற்றுகிறது.

#TamilSchoolmychoice

• இரசிகர்கள் இந்தத் திரைப்படங்களையும் மேலும் பலவற்றையும் எதிர்பார்க்கலாம்:

o லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அதிரடி திரில்லர் திரைப்படம் பில்லா, உளவியல் அதிரடி திரில்லர் திரைப்படம் இமைக்கா நொடிகள், கருப்புக் குற்ற நகைச்சுவைத் திரைப்படம் கோலமாவு கோகிலா, திரில்லர் திரைப்படம் கொலையுதிர் காலம் மற்றும் திகில் திரைப்படம் ஐரா.

o சிம்ரன் நடித்தக் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஒன்ஸ் மோர், காதல் நாடகத் திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும், உளவியல் காதல் திரில்லர் திரைப்படம் வாலி, காதல் நாடகத் திரைப்படம் பிரியமானவளே மற்றும் காதல் திரைப்படம் 12பி.

o த்ரிஷா நடித்த விளையாட்டு அதிரடித் திரைப்படம் கில்லி, காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஹே ஜூடு, திகில் திரைப்படம் மோகினி, காதல் நாடகத் திரைப்படம் 96 மற்றும் அரசியல் திரில்லர் திரைப்படம் பரமபதம் விளையாட்டு.

o ஜோதிகா நடித்த நகைச்சுவை நாடகத் திரைப்படம் 36 வயதினிலே, நகைச்சுவை நாடகத் திரைப்படம் காற்றின் மொழி, குற்றத் திரைப்படம் செக்கச் சிவந்த வானம், சமூக நாடகத் திரைப்படம் ராட்சசி மற்றும் சட்ட நாடகத் திரைப்படம் பொன்மகள் வந்தாள்.

• மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.