Home இந்தியா ஒரே மேடையில் மோடி-ஸ்டாலின் – கச்சத் தீவை மீட்கக் கோரிக்கை

ஒரே மேடையில் மோடி-ஸ்டாலின் – கச்சத் தீவை மீட்கக் கோரிக்கை

708
0
SHARE
Ad
மு.க.ஸ்டாலின் – கோப்புப் படம்

சென்னை : இன்று வியாழக்கிழமை மாலையில் சென்னை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புடைய வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.

இங்குள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரதமருடன் கலந்து கொண்டார்.

ஸ்டாலின் தனதுரையில் திராவிட மோடல் ஆட்சி குறித்து பிரதமரிடம் விளக்கினார். அவரின் உரை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. மேலும் இலங்கைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை இந்தியா இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் எனவும் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.

#TamilSchoolmychoice

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஸ்டாலின் பிரதமரிடம் முன்வைத்தார்.