கோலாலம்பூர் : ஊராட்சி வீடமைப்புத் துறை அமைச்சர் டத்தோ சுரைடா கமாருடின், பெர்சாத்து கட்சியில் இருந்து விலகி, பார்ட்டி பங்சா மலேசியா (பிபிஎம்) என்ற புதிய கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
நீண்ட காலமாக பிகேஆர் கட்சியின்வழி அரசியலில் ஈடுபட்டு வந்த சுரைடா 2018-இல் அம்பாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக துன் மகாதீரால் நியமிக்கப்பட்டார்.
2020-இல் அஸ்மின் அலியோடு சேர்ந்து பிகேஆர் கட்சியிலிருந்து விலகி அப்போதைய பிரதமர் மொஹிடின் யாசின் அமைச்சரவையில் இணைந்தார்.
பார்ட்டி பங்சா மலேசியா என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து சுரைடா அந்தக் கட்சி அமைப்பதில் பின்னணியில் செயலாற்றி வந்தார் எனக் கூறப்பட்டு வந்தது.