Home வாழ் நலம் குடைமிளகாயின் மருத்துவ பலன்கள்

குடைமிளகாயின் மருத்துவ பலன்கள்

980
0
SHARE
Ad

4476afd9-5528-4348-a614-cfd3d4d2c056_S_SecVPF

கோலாலம்பூர், டிசம்பர் 10 – வண்ண வண்ணமாய் தெரியும் குடை மிளகாய் பார்க்க மட்டும் அழகானது இல்லை ஆரோக்கியத்திலும் அபாரமானது! கொளுப்பு , நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் இதில் அடங்கியுள்ளது.

காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு காரமற்றது குடைமிளகாய். உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை.

#TamilSchoolmychoice

குடை மிளகாயை உணவில் சேர்ப்பது பல விதங்களில் நமக்கு பலன் அளிக்கிறது. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக அது செயல்படுகிறது. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும். அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்துகிறது.

பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சக்தியும் ‘காப்ஸேயில்’ இருக்கிறது. காப்ஸேயில் ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

மேலும், குடைமிளகாய் கொளுப்பு மற்றும் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்க்கட்டை குறைக்கும் தன்மையும் கொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைய உள்ளது.

இவை இரண்டும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குடைமிளகாய் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அதிகமாக கிடைக்கிறது. பச்சையாகவோ, பாதி வெந்நிலையிலோ இதை சாப்பிட்டால்தான் கூடுதல் சத்து உடலுக்கு கிடைக்கும்.