பெய்ஜிங், ஜன 23– அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பாப் பாடகி லேடி ககாவின் இசை ஆல்பம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இவரது ஆல்பம் சீன கலாசாரத்துக்கு எதிராக மிகவும் ஆபாசமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், கடந்த 2011–ம் ஆண்டு முதல் சீனாவில் இவரது இசை ஆல்பம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இவரது இசை ஆல்பம் விற்பனைக்கான தடையை சீனா தற்போது விலக்கியுள்ளது.
லேடி ககாவின் இசை ஆல்பத்தின் படுகவர்ச்சியான காட்சிகள், சீன கலாசாரத்துக்கு உகந்ததாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இவரது இசை ஆல்பத்திற்கு சீனாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், லேடி ககாவின் கவர்ச்சி காட்சிகள் மாற்றம் செய்யபட்டுள்ளது. இதற்கிடையே தனது இசை ஆல்பத்தின் மீதான தடையை நீக்கியுள்ளதற்கு லேடி ககா நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். அடுத்தபடியாக விரைவில் சீனா சென்று நடன நிகழ்ச்சி நடத்துவேன் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.