Home உலகம் சீனாவில் ‘தூங்கும் பாடத்திட்டம்’ அறிமுகம்

சீனாவில் ‘தூங்கும் பாடத்திட்டம்’ அறிமுகம்

475
0
SHARE
Ad

sleeping kids 1

பீஜிங், ஜன 27- பள்ளிகளில் தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் இடைவிடாமல் படிக்கும் மாணவர்கள் மிக எளிதில் சோர்வடைந்து விடுகின்றனர். இதனால், அவர்களால் தொடர்ந்து உற்சாகத்துடன் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகின்றது.

பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை தொடர்பாக கூர்ந்து கவனித்து வந்த சீன கல்வியாளர்கள், சோதனை முயற்சியாக மழலையர் வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தில் தூங்கும் வகுப்பையும் சேர்க்கும்படி பரிந்துரைத்தனர்.

#TamilSchoolmychoice

இதன்படியே, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சுமார் 20 நிமிடங்களுக்கு மழலையர் வகுப்பு பிள்ளைகள் உறங்க வைக்கப்பட்டனர். இந்த புதிய திட்டம் பெரிய பலனை அளித்திருந்த்து .

20 நிமிட ஓய்வுக்கு பின்னர் கண் விழித்த பிள்ளைகள், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உற்சாகத்துடனும், அறிவுக் கூர்மையுடனும் படிப்பில் நாட்டம் செலுத்துவதை பார்க்க முடிந்தது.

இந்த பலனை கண்டு இதர மேல்வகுப்பு மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தலாமா? என்பது தொடர்பாக சீன அரசின் கல்வித்துறை அதிகாரிகள் தற்போது ஆலோசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.