Home தொழில் நுட்பம் உறங்கும் நேரத்தில் உங்கள் திறன்பேசியை ஆராய்ச்சிகளுக்கு தானம் செய்யலாம்!

உறங்கும் நேரத்தில் உங்கள் திறன்பேசியை ஆராய்ச்சிகளுக்கு தானம் செய்யலாம்!

646
0
SHARE
Ad

samsung-power-sleep-390x285பிப்ரவரி 19 – இரவில் சார்ஜ் செய்வதற்காக வைக்கப்படும் உங்களது திறன்பேசியையும்(Smart Phone) அதன் செயலியையும் (Processor) உலக அளவில் செய்யப்படும் ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுத்த முடியும் என்றால் நீங்கள் மகிழ்வீர்கள் தானே?

‘பவர் ஸ்லீப்’ என்று அழைக்கப்படும் இந்த செயலி, பிரபல சாம்சங் நிறுவனம் மற்றும் வியன்னா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கருவி சார்ஜ் செய்யப்படும் நேரம் வெளிப்படும் ஆற்றலை அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்த உதவுகிறது.

இரவில் இணையத் தொடர்புடன் (WIFI) செல்பேசியை சார்ஜ் செய்ய வைத்துவிட்டால், இந்த ‘பவர் ஸ்லீப்’ செயலி வழியாக அதன் ஆற்றல் ஆராய்ச்சிகளுக்கு வழங்கப்படும். பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் நாம் தானமாக கொடுக்கும் ஆற்றலை பயன்படுத்தி மரபியல், உயிர் வேதியியல், புற்றுநோய் மற்றும் பிற பகுதிகள் குறித்த நமது புரிதலை மேலும் நல்ல முறையில் அதிகப்படுத்துவார்கள்.

#TamilSchoolmychoice

இந்த ‘பவர் ஸ்லீப்’ செயலியை நமது ஆண்டிராய்டு இயங்குதளத்தில் பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துவதன் மூலம், நமது கருவி ஆராய்ச்சிகளுக்கு எவ்வளவு உதவுகின்றது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

தற்போது இந்த செயலி Google Play Store ல் பதிவிறக்கம் செய்ய தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.