Home இந்தியா நரேந்திர மோடிக்காக நிர்வாண போஸ் கொடுக்கவில்லை: நடிகை மேக்னா படேல்

நரேந்திர மோடிக்காக நிர்வாண போஸ் கொடுக்கவில்லை: நடிகை மேக்னா படேல்

507
0
SHARE
Ad
images (2)டில்லி,பிப்19-நரேந்திர மோடிக்காக நிர்வாண போஸ் கொடுக்கவில்லை என்று நடிகை மேக்னா படேல் தெரிவித்துள்ளார்.
இவர் சமீபத்தில் நரேந்திர மோடி பட போஸ்டரை உடலில் மறைத்தும் தாமரை பூக்கள் மேல் ஆடையின்றி படுத்தும் ஆபாச போஸ் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். நிர்வாண போஸ் கொடுத்துள்ளதாக விமர்சனங்கள் கிளம்பின.

இதற்கு மேக்னா படேல் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

நரேந்திர மோடியை எனக்கு பிடிக்கும். அவர் சிறந்த அரசியல்வாதி. குஜராத் மாநில வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். தற்போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். மோடி பிரதமரானால் நாட்டுக்கு நிறைய நல்லது செய்வார்.

பேச்சு சுதந்திரம் என்பது மக்களுக்கு உள்ள உரிமை. யாராக இருந்தாலும் தங்கள் எண்ணங்களை உடல் மூலம் வெளிப்படுத்த முடியும். அப்படித்தான் நான் போஸ் கொடுத்தேன். இதில் எந்த தவறும் இல்லை.

#TamilSchoolmychoice

நான் நிர்வாண போஸ் கொடுத்ததாக விமர்சிக்கப்படுகிறது. ‘போட்டோ சூட்’ நடந்தபோது எனது ஆடைகள் அனைத்தையும் களையவில்லை. நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை. உள்ளாடைகள் அணிந்து இருந்தேன்.

எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். நிர்வாண போஸ் கொடுத்தால் பிரச்சினைகள் வரும் என்றும் அறிவேன். எல்லாமே சட்டபடிதான் நடந்தது. எந்த தவறும் நிகழவில்லை.என மேக்னாபடேல் கூறினார்.