Home இந்தியா ஜெயலலிதாவின் மற்றொரு பெயர் வாய்தா – ராமதாஸ்!

ஜெயலலிதாவின் மற்றொரு பெயர் வாய்தா – ராமதாஸ்!

504
0
SHARE
Ad

ramadosssசோளிங்கர், மார்ச் 20 – பாமக இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு நடந்தது. இதில்,  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஆர்.வேலுவை ஆதரித்து ராமதாஸ் பேசினார்.

அப்போது, வேட்பாளர் வேலு அனைவருக்கும் பொதுவானவர். அவருக்கு நீங்கள் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்யவேண்டும். 134 பாமக நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த முதல்வர் ஜெயலலிதா ஒரு ஹிட்லர்.

அவரது மற்றொரு பெயர் வாய்தா. 2016-ஆம் ஆண்டு பாமக ஆட்சி அமைக்க, அரக்கோணம் தொகுதியின் வெற்றி, பிள்ளையார் சுழியாக அமைய வேண்டும்.

#TamilSchoolmychoice

நீதி, நேர்மையோடு அதிகாரிகள் தேர்தலை நடத்த தவறினால் அவர்களை கூண்டில் ஏற்றுவோம். காவல்துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. காவலர்கள், எதிர்க்கட்சியினரை பழி வாங்காமல் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளைகளை தடுத்து சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும்.

தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்க மற்ற கட்சியினர் தயாராகவுள்ளனர். பாமக இளைஞர்கள் துப்பறியும் நிபுணர்களாக மாறி, எங்கிருந்து பணம் வருகிறது,

யாருக்கு போகிறது என்பதை கண்டுபிடித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். படி, படி என்று சொல்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், குடி குடி என்று சொல்பவர்களுக்கு வாக்களிக்க கூடாது என ராமதாஸ் பேசினார்.