Home தொழில் நுட்பம் மோட்டோரோலாவின் ‘ஜி போர்ட்’ திறன்பேசி அறிமுகம்!

மோட்டோரோலாவின் ‘ஜி போர்ட்’ திறன்பேசி அறிமுகம்!

500
0
SHARE
Ad

Novo-Motorola-Moto-G-Forte-para-ser-lançado-em-breveமெக்ஸிகோ, ஏப்ரல் 4 – பிரபல செல்பேசி தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா ‘மோட்டோ ஜி போர்ட்’ என்ற தனது புதிய தயாரிப்பு திறன்பேசியை மெக்ஸிகோவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திறன்பேசி தண்ணீர் மற்றும் தூசியை உட்புகாமல் தடுக்கும் தொழில்நுட்பம் கொண்டது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த புதிய வகை திறன்பேசி ஏற்கனவே வெளியிடப்பட்ட மோட்டோ ஜி என்ற அதன் முந்தைய பதிப்பில் இருந்து பெரிய அளவில் மாறுபடவில்லை.

#TamilSchoolmychoice

எனினும், கருவியின் பின்பக்கம் கடினமான மூடி (Cover) ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு வித்தியாசம் தான் செய்யப்பட்டுள்ளது.

‘கிரிப் செல்’ என்று அழைப்படும் இந்த மூடியை மோட்டோ ஜி வைத்திருப்பவர்கள் தனியாகவும் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அதன் விலை 19.99 அமெரிக்க டாலர் ஆகும்.

இந்த ‘கிரிப் செல்’, கருவியை அதிர்வில் இருந்தும், சிராய்ப்புகளில் இருந்தும் பாதுகாக்கிறது. தவறுதலாக கருவியை கீழே போட்டு விட்டாலும் அதற்கு சேதம் ஏற்படாத வகையில் இந்த மூடி பாதுகாப்பு அளிக்கின்றது.

இந்த திறன்பேசியானது 4.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல (Quad Core Processor, 1GB RAM ) ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது.

மேலும் கூகுளின் 4.4 கிட் கட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இந்த திறன்பேசியில் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கேமெரா, மற்றும் 1.3 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கேமெராவும் தரப்பட்டுள்ளது.