Home இந்தியா ராகுல் காந்தியின் விண்ணப்பம் நிராகரிப்பு!

ராகுல் காந்தியின் விண்ணப்பம் நிராகரிப்பு!

502
0
SHARE
Ad

rahulஅமேதி, ஏப்ரல் 4 – வங்கி கணக்கு தொடங்குவதற்காக, விண்ணப்பித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் விண்ணப்பம், தவறான முகவரி என்று கூறி நிராகரிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, போட்டியிடும் தொகுதியில் உள்ள வங்கியில் கணக்கு வைத்து, அதில் செலவு கணக்கை காட்ட வேண்டும் என்பதற்காக,ராகுல் அமேதி தொகுதியில் உள்ள வங்கியில் கணக்கு துவங்க விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், அமேதியில், ராகுலுக்கு வீடு இருப்பதற்கோ, அல்லது அவர் அவ்வப்போது வந்து தங்கியிருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வங்கி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்ததால், ராகுலின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வரும் ராகுல் காந்தியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.