Home இந்தியா முத்தமிட முயன்றால் யாராக இருந்தாலும் அடிப்பேன் – நக்மா!

முத்தமிட முயன்றால் யாராக இருந்தாலும் அடிப்பேன் – நக்மா!

527
0
SHARE
Ad

22-nagma-cong-600டெல்லி, ஏப்ரல் 4 – நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நடிகை நக்மா, தனக்கு முத்தமிட முயன்றால், யாராக இருந்தாலும் அடிப்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நடிகை நக்மா, பிரசாரம் செய்யும் போது, மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூடவே, அவரை தொட்டுப் பார்க்கவும் சில தொண்டர்கள் நினைத்து அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறார்கள்.

முதலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரில் ஆரம்பித்த இந்த பிரச்சனை, தற்போது தொண்டர்கள் வரை வந்துவிடது. கடந்த வாரம் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் ஒருவரை நக்மா அரைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், எனக்கு முத்தம் கொடுக்க முயன்றால் அவர்கள் யாராக இருந்தாலும் அடிப்பேன் என்று நக்மா ஆவேசமாக கூறியுள்ளார்.