காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் டெல்லியில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குஷ்புவும், நக்மாவும் அருகருகே அமர வைக்கப்பட்டும் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.
இந்நிலையில், இத்தகவல் ஊடகங்களில் பரவி வந்த நிலையில், அது குறித்து விளக்கமளித்துள்ள திருநாவுக்கரசர், குஷ்புவிற்கும், நக்மாவிற்கும் எந்த ஒரு கருத்து மோதலும் இல்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஊடகங்கள் தவறான செய்தியைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments