திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, தாராபுரம் (தனி), காரைக்குடி, மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியைச் சந்திக்கிறது.
கூடுதலாக, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தாராபுரம் – எல்.முருகன், காரைக்குடி- எச்.ராஜா, அரவக்குறிச்சி – அண்ணாமலை, கோவை தெற்கு – வானதி சீனிவாசன், ஆயிரம் விளக்கு – குஷ்பு, நாகர்கோவில் – எம்.ஆர். காந்தி ஆகியோர் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.