Home One Line P1 நூருல் இசா, ரபிசியை மீண்டும் பிகேஆருக்கு வரவழைக்க அன்வார் திட்டம்

நூருல் இசா, ரபிசியை மீண்டும் பிகேஆருக்கு வரவழைக்க அன்வார் திட்டம்

758
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நூருல் இசா மற்றும் ரபிசி ராம்லி போன்ற நபர்களை கட்சியில் தீவிர அரசியலுக்குத் திரும்ப அழைக்க முயற்சிப்பார் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இவர்களை போராட்டத்திற்கும் கட்சியின் பாதைக்கும் திரும்ப அழைப்போம். அவர்கள் பிடிவாதமாக இருந்தபோதிலும், நான் அவர்களின் கொள்கைகளை மதிக்கிறேன், ”என்று அவர் கூறினார்.

இரு ஆளுமைகளும் குணநலன்களைக் கொண்ட தலைவர்கள் என்று அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

பிகேஆரில் முந்தைய உள்தகராறுகளைத் தொடர்ந்து நூருல் இசா மற்றும் ரபிசி ஆகியோர் கட்சியில் உள்ள பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

“ரபிசி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை, ஆனால், கட்சியில் ஏதோ தவறு இருப்பதாக அவர் காண்கிறார். தேர்தலில் வென்றதும், நல்லவர்களை ஒதுக்கி தங்களுக்குத் தேவையானர்களை நியமிக்கும் ஒரு சிலரின் போக்குகள் இருந்தன, ” என்று அவர் கூறினார்.