Home One Line P1 பிகேஆரிலிருந்து விலகியது குறித்து கருத்து தெரிவிக்க சேவியர் மறுப்பு

பிகேஆரிலிருந்து விலகியது குறித்து கருத்து தெரிவிக்க சேவியர் மறுப்பு

574
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவு குறித்து கருத்து தெரிவிக்க பிகேஆர் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மறுத்துவிட்டார்.

சினார் ஹரியான் காணொலியில், தனது பதவி விலகல் குறித்து கேட்ட செய்தியாளர்களிடமிருந்து விலகிச் செல்வதைக் காணலாம்.

கொவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்காக பந்திங்கில் ஒரு விளையாட்டு வளாகத்தில் இருந்த சேவியர், நிருபர்கள் அவரை பிந்தொடர காரில் ஏறி சென்றுவிட்டார்.

#TamilSchoolmychoice

சனிக்கிழமையன்று, பிகேஆரிலிருந்து வெளியேறி அரசாங்கத்தை ஆதரிப்பதாக சேவியர் கூறினார்.

சேவியரின் அரசியல் செயலாளர், தனிப்பட்ட உதவியாளர் மற்றும் பிறர் கைது செய்வது உட்பட பல விசாரணைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொள்வதாக சேவியர் தலைமைக்குத் தெரிவித்ததாக கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுஷன் இஸ்மாயில் கூறியிருந்தர். அதன் பிறகு சேவியர் கட்சியிலிருது வெளியேறியுள்ளார்.