Home One Line P2 ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் ‘அரசியல் களம்’ 20 தொகுதிகளில் போட்டி

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் ‘அரசியல் களம்’ 20 தொகுதிகளில் போட்டி

682
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு இளைஞர்கள் கட்சி, வளமான தமிழகம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதாக அவர் கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய போது, கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளை உள்ளிட்டவற்றை வெளிக் கொண்டு வந்த சகாயம், தனது நேர்மையின் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளார். அவரது நேர்மையின் காரணமாக அடுத்தடுத்த பணியிட மாறுதல்கள், அதிகாரம் இல்லாத துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.