Home Photo News மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாக் காட்சிகள்

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாக் காட்சிகள்

954
0
SHARE
Ad

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பின்வருமாறு தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

“‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!”

இன்று பதவியேற்றுக் கொண்ட திமுக அமைச்சரவையில் தஞ்சையைப் பிரதிநிதித்து அமைச்சர்கள் யாரும் இடம் பெறவில்லை என்ற குறைகூறல்கள் எழுந்தன. அதற்குப் பதிலளிக்கும் விதமாகத்தான் தானே தஞ்சையைச் சார்ந்தவன்தான் என்பதைக் குறிக்கும் வண்ணம் ஸ்டாலின் பதிவிட்டார் எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

மேலும் முதல்வராகப் பதவியேற்றதும் எங்கெல்லாம் சென்றேன் என்பது குறித்தும் ஸ்டாலின் தனது டுவிட்டரில் பின்வருமாறு பதிவிட்டார்:

முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் திருவுருவப்படத்திற்கும், தொடர்ந்து அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினேன்!

பேராசிரியர் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கும், கலைஞரது சிஐடி காலனி இல்லத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினேன்.

ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற படக் காட்சிகளை இங்கே காணலாம்: