Home நாடு ஐஜிபி குற்றச்சாட்டுகள் : அரச விசாரணைக் குழு அமைப்பீர் – சாஹிட் ஹாமிடி கோரிக்கை

ஐஜிபி குற்றச்சாட்டுகள் : அரச விசாரணைக் குழு அமைப்பீர் – சாஹிட் ஹாமிடி கோரிக்கை

758
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பதவி விலகிய காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ ஹாமிட் பாடோர் காவல் துறையில் நிலவும் அரசியல் தலையீடுகள் குறித்து முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரச விசாரணை வாரியம் அமைக்க வேண்டும் என அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போன்று சட்டத்துறையின் முன்னாள் தலைவர் டோமி தோமஸ் எழுப்பியிருக்கும் சில குற்றச்சாட்டுகள் குறித்தும் அரச விசாரணை வாரியம் விசாரிக்க வேண்டும் என்றும் சாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாகக் கருதுவதாகவும் சாஹிட் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அரச வாரியம் அமைக்கப்படுவதற்கு தற்போது அமைச்சரவையில் உள்ள அம்னோ அமைச்சர்கள் நெருக்குதல் தரவேண்டும் என்றும் சாஹிட் ஹாமிடி கேட்டுக் கொண்டார்.