Home நாடு கொவிட்-19: மலேசியாவில் ஒருநாளில் 4,500-ஐ எட்டியது – மரணங்கள் 22

கொவிட்-19: மலேசியாவில் ஒருநாளில் 4,500-ஐ எட்டியது – மரணங்கள் 22

702
0
SHARE
Ad

கோலாலம்பூர்: (கூடுதல் தகவல்களுடன்) இன்று வெள்ளிக்கிழமை (மே 7) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் 4,498 எண்ணிக்கையைத் தொட்டன.

இது நேற்றைய எண்ணிக்கையை விட ஆயிரம் தொற்றுகள் கூடுதலாகும்.

மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது. 1,424 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. கோலாலம்பூர் 436 தொற்றுகளைப் பதிவு செய்தது.

#TamilSchoolmychoice

நாட்டிலேயே இரண்டாவது நிலையில் மிக அதிகமாக கொவிட்-19 தொற்றுகளைப் பதிவு செய்த மாநிலமாக சரவாக் இருக்கிறது. இங்கு 750 தொற்றுகள் பதிவாயின.

இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 432,425 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 22-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 1,632 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தமுள்ள 4,498 தொற்றுகளில் 4,493 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும்.  5 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் மட்டும் 3,449 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 396,004 ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 34,789 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 372 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 211 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.