Home One Line P1 பேராக் ஜசெக மாநாட்டில் வாய்ச் சண்டைகள் ஏற்பட்டதை காவல் துறை உறுதிபடுத்தியது

பேராக் ஜசெக மாநாட்டில் வாய்ச் சண்டைகள் ஏற்பட்டதை காவல் துறை உறுதிபடுத்தியது

736
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று 19- வது பேராக் ஜசெக மாநாட்டில் நடந்த குழப்பத்தில் வாய் சண்டைகள் மட்டுமே ஏற்பட்டதாகவும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

ஈப்போ அனைத்துலக மாநாட்டு மையத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்ற மாநாட்டின் போது ஜசெக பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நடந்ததை உறுதிப்படுத்தியதாக ஈப்போ மாவட்ட காவல் துறைத் தலைவர் அஸ்மாடி அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

மாநாடு குறித்து காவல் துறைக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“மாநாடு தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) கோடிட்டுக் காட்டிய நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி) நடைமுறையின் கீழ் நடைபெற்றது. கண்காணிப்பில் , மண்டபத்தின் மொத்த வருகை விதிமுறைக்கு உட்பட்டிருந்தது. மாநாட்டு நிகழ்ச்சியின் போது குழப்பம், வாய்மொழி சண்டைகள் மட்டுமே இருந்தது. அசம்பாவிதங்கள் இல்லாமல் நிலைமை வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது, ” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குழப்பத்தின் போது, கட்டுப்படுகளை மீறிய குற்றம் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அஸ்மாடி தெரிவித்தார்.