Home One Line P1 அம்னோவிலிருந்து கட்சித் தாவியவர்களின் எல்லா தொகுதிகளிலும் போட்டி!

அம்னோவிலிருந்து கட்சித் தாவியவர்களின் எல்லா தொகுதிகளிலும் போட்டி!

639
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலில் அம்னோவிலிருந்து பெர்சாத்துவிற்கு கட்சித் தாவிய தேர்தல் தொகுதிகள் குறித்து இனி பேசுவதற்கு எதுவும் இல்லை என்று அம்னோ தேர்தல் நடவடிக்கை இயக்குனர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் அம்னோ தோல்வியடைந்ததை அடுத்து, அதன் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறி பெர்சாத்துவில் இணைந்தனர்.

கட்சித் தாவியவர்களின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற கட்சி நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, தேசிய கூட்டணியுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அஸ்மின் அலி அம்னோவை அழைத்திருந்தார்.

“அம்னோவின் நிலைப்பாடு, இழந்த அனைத்து தொகுதிகளையும் திரும்பப் பெறுவதாகும்.  நாங்கள் அவற்றை திரும்பப் பெற விரும்புவதால், பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, ” என்று தாஜுடின் கூறினார்.

முஸ்தாபா முகமட் (ஜெலி நாடாளிமன்றம்), டாக்டர் நூர் அஸ்மி கசாலி (பாகான் செராய்), மாஸ் எர்மியாதி சம்சுடின் (மஸ்ஜிட் தானா), ஹம்சா சைனுடின் (லாருட்), ரோசோல் வாஹிட் (கோலா திரெங்கானு), சைட் அபு ஹுசைன் ஹாபிஸ் சைட் அப்துல் பாசால் (புக்கித் கந்தாங்), அப்துல் லாதிப் அகமட் (மெர்சிங்), ஷாபுடின் யாய்யா (தாசெக் குளுகோர்), முகமட் பாசியா முகமட் பாகெ (சாபாக் பெர்னாம்), இக்மால் ஹிஷாம் அப்துல் அசிஸ் (தானா மெரா), அசிசா முகமட் டுன் (பியோபோர்ட்), ரோனால்ட் கியாண்டி (பெலுரான்), அப்துல் ரகீம் பக்ரி (குடாட்), சாகாரியா முகமட் இட்ரிஸ் (லிபாரான்), மற்றும் யாமானி ஹாபிஸ் மூசா (சிபிதாங்) ஆகியோர் இது வரையிலும் தேசிய முன்னணியை விட்டு தேசிய கூட்டணிக்கு கட்சித் தாவி உள்ளனர்.