ஜாம்போங்கா சிட்டி (பிலிப்பைன்ஸ்) – அபு சயாப் அமைப்பினரால் கடத்தப்பட்ட ஜெர்மன் நாட்டவர் ஜூஜென் காந்தெருடன் வந்த பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரது சடலம் சுலுவில் படகு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
சுலுவில் லாபாரான் தீவின் அருகே பாங்குதாரான் என்ற இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் அப்பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டதாக பிலிப்பைன்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
அச்சடலத்தில் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்ததற்கான காயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தெற்கு பிலிப்பைன்சைச் சேர்ந்த தாவி தாவி தீவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளைத் தாங்கள் பிணை பிடித்ததாக அபு சயாப் நேற்று அறிவித்தது.
அதில் எதிர்பாராதவிதமாக பெண் பிணைக் கைதி இறந்துவிட்டதாகவும், அவர் தங்களை நோக்கி துப்பாக்கியால் சுட முயற்சி செய்த போது, பதிலுக்கு தாங்கள் சுட்டதாகவும் அபு சயாப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படம்: (People’s Television )