Home Featured வணிகம் சகல வசதிகள் கொண்ட உடற்பயிற்சிக் கூடம் – சரத்குமார் திறந்து வைத்தார்!

சகல வசதிகள் கொண்ட உடற்பயிற்சிக் கூடம் – சரத்குமார் திறந்து வைத்தார்!

883
0
SHARE
Ad

sarathkumarசென்னை – தமிழ்த் திரையுலகில் தற்போதைய சூழலில் சூர்யா முதல் ஆர்யா வரை அனைவருமே கட்டுடலோடு சிக்ஸ்பேக் வைத்திருக்கின்றனர். தினமும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

sarathkumar-3ஆனால் 80-ம், 90-ம் ஆண்டுகளில், திரையுலகை எடுத்துக் கொண்டால், இளைஞர்கள் சட்டெனக் குறிப்பிட்டு சொல்வது நடிகர் சரத்குமார் தான். ஒவ்வொரு படத்திலும் தனது அட்டகாசமான உடற்கட்டால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தவர். 60 வயதைக் கடந்துவிட்டாலும் இன்றும் அதே உடற்கட்டோடு வலம் வருகிறார் சரத்குமார்.

sarathkumar-1சென்னை மேற்கு மாம்பலத்தில், “ஃபிளக்ஸ் பிட்னஸ் & ஸ்பா சலூன்” என்ற புதிய உடற்பயிற்சிக் கூடத்தை அண்மையில் சரத்குமார் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “என்னுடைய நண்பர் சிக்கந்தர் மகனின் புதிய உடற்பயிற்சிக் கூடத்தை துவக்கி வைத்தேன். அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.