Home One Line P2 சரத்குமார் கூட்டணியில், மக்கள் நீதி மய்யம் இணைந்தால் கமல்ஹாசனே முதல்வர்

சரத்குமார் கூட்டணியில், மக்கள் நீதி மய்யம் இணைந்தால் கமல்ஹாசனே முதல்வர்

721
0
SHARE
Ad

சென்னை: இன்று புதன்கிழமை (மார்ச் 3) தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி பொதுக் குழு கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஊகத்தை வழங்கினார்.

சரத்குமார் ஒப்புக்கொண்டால் தாம் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறினார்.

மேலும், இதற்கு பிறகு பேசிய சரத்குமார், தாங்கள் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசி வருவதாகவும், விரைவில் கமல்ஹாசன் இது குறித்து அறிவிப்பார் என்றும் கூறினார்.  தங்களது முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசந்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, மக்கள் நீதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில், போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ஆம் தேதி வெளியிடப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி விவகாரங்கள், புதிய கூட்டணிகள், தொகுதி பங்கீடு, நட்சத்திர வேட்பாளர்கள் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.