Home One Line P1 எதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்

எதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்

466
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோவின் எதிரிகள் அதிகாரத்தை தற்காத்துக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

குறிப்பிட்டு எந்த கட்சியையும் குறிப்பிடாமல் சாஹிட் இதனை தமது முகநூல் பக்கத்தில் கூறினார்.

“முதலில், அவர்கள் அம்னோ தேசிய முன்னணி தலைவர்களை பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் பிரச்சாரங்களுடன் அவதூறு செய்தனர். பின்னர், அம்னோ தேசிய முன்னணி கட்சி புதிய அரசாங்கத் தலைவர்களால் காப்பாற்றப்படும் என்று பேசினர்.

#TamilSchoolmychoice

பாசாங்குத்தனம் நிறைந்த உரைகள் பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பைப் பெற்றன. உண்மை என்னவென்றால், தோற்ற பிறகு, அம்னோ தேசிய முன்னணி அவமதிக்கப்பட்டது, அவர்களால் முற்றிலுமாக அகற்ற முயற்சிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.