Home One Line P1 பெர்சாத்துவுடன் பொதுத் தேர்தலில் கூட்டணி இல்லை, அம்னோ கடிதம் அனுப்பியது உறுதி

பெர்சாத்துவுடன் பொதுத் தேர்தலில் கூட்டணி இல்லை, அம்னோ கடிதம் அனுப்பியது உறுதி

551
0
SHARE
Ad

கோலாலம்பூர்- 15- வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணி உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கட்சியின் உச்சமன்றக் குழு முடிவை தெரிவிக்க அம்னோ பிரதமர் மொகிதின் யாசினுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பிப்ரவரி 26 அன்று பெர்சாத்து தலைவருக்கு அறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்டதாக அம்னோ உள் வட்டாரம் உறுதிப்படுத்தின.

இருப்பினும், இந்த கடிதம் தொடர்பாக இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஆம், பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அம்னோ கூட்டத்தின் முடிவைத் தெரிவிக்க பிப்ரவரி 26 அன்று கடிதம் அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற கலைக்கப்படும் வரை அம்னோ தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள். இருப்பினும், கடிதத்திற்கு எந்த பதிலும் இன்னும் கிடைக்கவில்லை,” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

அண்மையில் பகாங்கில் நடைபெற்ற அம்னோ உட்டமன்றக் குழு சந்திப்பில் அம்னோவின் முடிவின் அடிப்படையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

ஜனவரி 9- ஆம் தேதி, அம்னோ உச்சமன்றம் 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பைத் துண்டிக்கும் தீர்மானத்திற்கு ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது.