Home One Line P1 கொவிட்-19: நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வளையம் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனம் பயன்படுத்தப்படும்

கொவிட்-19: நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வளையம் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனம் பயன்படுத்தப்படும்

356
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கண்டறியும் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான உத்தரவு மார்ச் 11 முதல் நடைமுறைக்கு வரும் அவசரகால (நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) (திருத்தம்) கட்டளைச் சட்டம் 2021- இல் உள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வளையம் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனத்தைப் பயன்படுத்துவது மூன்று தரப்புகளுக்கு கட்டாயமானது. அதாவது கொவிட்-19 தொற்று கண்டவர்கள்; பரிசோதனையில் உள்ள நபர்கள் (PUI) அல்லது கொவிட் -19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள்; மற்றும் கண்காணிப்பு கீழ் உள்ள நபர்களுக்கு (PUS)இது பொருத்தப்படும்.

“சாதனம் பயன்படுத்துவதற்கான காலம் 10 நாட்களுக்குள் உள்ளது,” என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.