Home One Line P1 பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லை என்ற கடிதத்தை சாஹிட் உறுதிபடுத்த வேண்டும்

பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லை என்ற கடிதத்தை சாஹிட் உறுதிபடுத்த வேண்டும்

493
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து உடனான கட்சியின் நிலைப்பாடு குறித்து மொகிதின் யாசினுக்கு கடிதம் அனுப்பியிருந்ததை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்துமாறு தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார்.

பிப்ரவரி 26 அன்று சாஹிட் மொகிதினுக்கு ஒரு கடிதம் எழுதியதாக அவர் கூறினார். அதில் பிப்ரவரி 19 அன்று பகாங்கில் நடந்த அம்னோ உச்சமன்றக் கூட்டத்தின் முடிவை பெர்சாத்து தலைவருக்கு தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ, பெர்சாத்து உடன் ஒத்துழைக்காது என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை மட்டுமே கட்சி, அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் என்றும் அந்த கடிதம் அறிவித்திருந்ததாக அனுவார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த முடிவின் பின்னணியில் உள்ள நோக்கத்தை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் தேர்தலுக்கான தேதி நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

“(அம்னோ) உறுப்பினராக, இந்த செய்தி உண்மையா என்பதை அறிய எங்களுக்கு உரிமை உண்டு. அப்படியானால், முடிவைப் பற்றி எங்களுக்கு ஏன் அறிவிக்கப்படவில்லை? இந்த விஷயத்தில் ஒரு பிரேரணை முதலில் வருடாந்திர பொது கூட்டத்திக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு ஏன் முடிவு செய்துள்ளனர்?,” அவர் முகநூல் பதிவில் கூறினார்.

பெர்சாது உடன் பணிபுரிய மறுப்பது தேசிய கூட்டணியையும் அதன் அங்கக் கட்சிகளான பாஸ், கெராக்கான், ஸ்டார் மற்றும் பிபிஎஸ் ஆகியவற்றை நிராகரிப்பதையும் குறிக்கிறது என்று அனுவார் கூறினார்.