Home One Line P1 அவசரநிலை முடியும் வரை நாடாளுமன்ற அமர்வு நடக்காது

அவசரநிலை முடியும் வரை நாடாளுமன்ற அமர்வு நடக்காது

387
0
SHARE
Ad

கோலாலம்பூர்- ஆகஸ்டு 1 வரை அவசநிலை பிரகடனம் நடப்பில் இருப்பதால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க அமைச்சரவை மாமன்னருக்கு அறிவுரை வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

“எந்தவொரு நாடாளுமன்ற அமர்வையும் அழைப்பது அமைச்சரவையின் முடிவைப் பின்பற்ற வேண்டும். எனவே, இப்போது எந்தவொரு நாடாளுமன்ற அமர்வும் இருக்காது என்று அமைச்சரவை மாமன்னருக்கு அறிவுறுத்துகிறது. இதுதான் இப்போதைய நிலைமை. அவசரநிலை முடிந்ததும் நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார். இப்போதைக்கு, நாடாளுமன்றம் கூட்டப்படாததால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் -19 தொற்றை எதிர்ப்பதில் கவனம் செலுத்தலாம். இதுதான் காரணம், வேறு எந்த நோக்கமும் இல்லை,” என்று அவர் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்றும், மக்களவையில் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 77 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

#TamilSchoolmychoice

“எனவே, நமது 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அதிக ஆபத்துள்ளவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம், பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஆகஸ்டு மாதம் வரை அவசர காலங்களில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க முடியும் என்று மாமன்னர் கூறியிருந்தார்.