Home One Line P1 திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11 வெளியீடு

திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11 வெளியீடு

533
0
SHARE
Ad

சென்னை: தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், வரும் மார்ச் 11-ஆம் தேதி அன்று திமுக கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய 2021 சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்களின் மனங்களைக் கவரும், கழகத்தின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை மார்ச் 11-ம் தேதி வெளியிடவிருக்கிறேன். அதற்கு முன்பாக, களத்தில் நிற்கும் ஆர்வத்துடன் கழகத்தினர் ஆயிரக்கணக்கில் விருப்பமனு தந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் சந்திக்கும் வகையில் மாவட்டவாரியாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.” என்று அவர் ஒரு கடிதத்தில் கூறியுள்ளார்.

தோழமைக் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை அதற்கென அமைக்கப்பட்ட குழு சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.