Home Featured தமிழ் நாடு 50 கோடி செலவில் போடப்பட்ட தனுஷ்கோடி சாலை – பயன்படுத்துவதற்கு முன்பே சேதம்!

50 கோடி செலவில் போடப்பட்ட தனுஷ்கோடி சாலை – பயன்படுத்துவதற்கு முன்பே சேதம்!

711
0
SHARE
Ad

dhanushkodiசென்னை – தமிழகத்தில் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களில் இராமேஸ்வரமும் ஒன்று.

அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கடந்த 1964-ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையில் முற்றிலும் அழிந்து போன நகரமான தனுஷ்கோடியைப் பார்வையிடத் தவறுவதில்லை.

தனுஷ்கோடியை அடைந்து அங்கு சிதறிக் கிடக்கும் அழிந்து போன நகரத்தினைப் பார்வையிட அவர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளவும் தயங்குவதில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தனுஷ்கோடிக்குச் செல்லும் சாலையை சீரமைத்து புத்துயிர் ஊட்டும் முயற்சியில் இறங்கிய மத்திய அரசு, அதற்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 9 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணியைக் கடந்த 2014-ம் ஆண்டு துவக்கி வைத்தது.

இந்நிலையில், அச்சாலைப் பணிகள் நிறைவடைந்து இன்னும் அதிகாரப்பூர்வமானப் பொதுமக்களின் பயன்பாட்டித்திற்குத் தயாராக நிலையில், இப்போதே அச்சாலையில் 20 அடி தூரத்திற்கு அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடலில் ஏற்படும் கொந்தளிப்பால், பேரலைகள் ஏற்படுவது அப்பகுதியில் சகஜம்.

இந்நிலையில் நவம்பர் தொடங்கி ஒரு சில நாட்களிலேயே தனுஷ்கோடி சாலை சேதமடைந்திருப்பது அப்பகுதி மக்களைக் கவலையடையச் செய்துள்ளது.

இவ்வாண்டு நிறைவு பெறுவதற்குள் அச்சாலை முற்றிலும் சேதமடைந்துவிடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.