Home Featured உலகம் ஹிலாரி மீது குற்றச்சாட்டு இல்லை – அமெரிக்க புலனாய்வுத் துறை அறிவிப்பு

ஹிலாரி மீது குற்றச்சாட்டு இல்லை – அமெரிக்க புலனாய்வுத் துறை அறிவிப்பு

747
0
SHARE
Ad

hilary-clinton

வாஷிங்டன் –  ஹிலாரி கிளிண்டன், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தனது தனிப்பட்ட இணைய அஞ்சல்களை அனுப்பியது தொடர்பில், எழுந்த சர்ச்சைகளின் காரணமாக அவர் மீதான விசாரணை நடத்தப்படும் என  எஃப்.பி.ஐ எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை அறிவித்திருந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஹிலாரி எந்தவித குற்றமும் இழைக்கவில்லை எனவும் முன்வைக்கப்பட்ட இணைய அஞ்சல்கள் ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டவை என்றும் அவற்றில் குற்றம் சாட்டப்படும் அளவுக்கு அம்சங்கள் இல்லை என்றும் இன்று திங்கட்கிழமை எஃப்.பி.ஐ இயக்குநர் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நாளை செவ்வாய்க்கிழமை அமெரிக்கர்கள் அதிபர் தேர்தலில் வாக்களிக்க செல்லவிருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரவு பகலாக, அந்த இணைய அஞ்சல்கள் அதிகாரிகளால் சோதிக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டிடிருக்கின்றது.

இருப்பினும், ஏறத்தாழ 41 மில்லியன் வாக்காளர்கள் இதுவரை வாக்களித்துள்ளனர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தேதி, எப்போதும் நவம்பர் 8 என்றாலும், அந்த தேதிக்கு முன்னரே வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க முடியும்.

எனவே, ஹிலாரி மீது விசாரணை என்ற எஃப்.பி.ஐ அறிவிப்பால் ஹிலாரிக்கு ஏற்கனவே வாக்களித்திருக்கும் வாக்காளர்களிடையே பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.