Home உலகம் டொனால்ட் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள்

டொனால்ட் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள்

1443
0
SHARE
Ad

வாஷிங்டன் : ஒருவழியாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் மீது 34 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

2016 அதிபர் தேர்தல் முறையுடனும் நேர்மையுடனும் நடத்தப்படுவதற்கு எதிராக அவர் சட்டத்துக்கு புறம்பான வகையில் சதியாலோசனையில் ஈடுபட்டார் என்பதை மையமாக வைத்து அவர்மீது நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அவர் பல ஆவணங்களை போலித்தனமாக தயாரித்தார் என்பதும் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

இதன் காரணமாக அவரால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி  எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பரில் நடைபெறும். எனவே, அதிபர் தேர்தலுக்கு முன்பாக வழக்கு முடிவடையுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதிபர் தேர்தல் 2024 நவம்பரில் நடைபெறவிருக்கிறது.

தன்மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

இதற்கிடையில் தொடர்ந்து குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராகும் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

டிரம்ப் மீதான வழக்கு, அவர் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவது ஆகிய காரணங்களால் 2024 அதிபர் தேர்தல் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் போட்டியாக உருவெடுக்கும்.