பெண்களின் நன்மதிப்பையும் தமிழ் மொழியின் உன்னதத்தையும் உலகுக்குக் காட்டிய ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாரின் அருளாசி பெற்று மலேசியத் திருநாட்டில், தெலுக் இந்தானில் முதல் சக்தி பீடம் எழும்பவுள்ளது.
ஆம்! நீண்ட பயணத்தின் ஒரு மைல்கல்.
மலேசிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக அறப்பணி இயக்கம் நடத்தும் கால்கோள் விழா!. மலேசிய பக்தர்களின் நீண்ட நாள் கனவு நனவாகும் வண்ணம், எதிர்வரும் 09.04.2023 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10க்கு, Batu 10, Taman Jendarata, SJKC YONG SENG (பின்புறத்தில்) சக்திபீடத்திற்கான திருப்பணிகள் தொடங்கவுள்ளன.
இவ்விழா, மலேசிய ஆதிபராசக்தி ஆன்மிக அறப்பணி இயக்கத்தின் தேசியத் தலைவர் அறப்பணி வேந்தர் ஓம்ஸ் ப. தியாகராஜன் அவர்கள் தலைமையேற்று நடத்தவுள்ளார்.
இக்கால்கோள் விழாவினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க மேல்மருவத்தூர் சித்தர் பீட நாயகர் அருள்திரு பங்காரு அடிகளாரின் துணைவியார் திருமதி லட்சுமி பங்காரு அடிகளார் அவர்கள் தன் திருக்குடும்பத்தாருடன் வருகை தரவுள்ளார்.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் மாண்புமிகு சரஸ்வதி கந்தசாமி, பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான அ. சிவநேசன், பேராக் ஹூத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி சின்னையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்வார்கள்.
மேல்மருவத்தூரின் நீண்ட கால பக்தரும், இயக்கத்தின் வேள்விக்குழுத் தலைவியுமான சக்தி ஜெயலெட்சுமி குட்டன் அவர்கள் இயக்கத்துக்காக வழங்கிய நிலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களின் ஒத்துழைப்பாலும், தலைவரின் ஆலோசனைகளும் பேராதரவும் பெற்று எழும்பவுள்ள இக்கால்கோள் விழாவுக்கு, பக்த பெருமக்கள், செவ்வாடைத் தொண்டர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கிறார்கள்.
தொடர்புக்கு :
சக்தி ஜெயா – 0125010482
சக்தி காந்தி – 019563619