*இந்தியப் புத்தாண்டில் ஆஸ்ட்ரோவில் உள்ளூர் – சர்வதேச முதல் ஒளிபரப்புகளைக் கண்டு மகிழுங்கள்
*டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் – ZEE5 செயலி ஆகியவற்றில் கண்டுக் களியுங்கள்
கோலாலம்பூர் – டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் அல்ட்ரா மற்றும் அல்டி பெட்டிகளில் கிடைக்கப்பெறும் ZEE5 செயலி ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் அற்புதமான உள்ளூர் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளுடன் இந்த இந்தியப் புத்தாண்டை, ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுகிறது. ஆஸ்ட்ரோ உலகம் மற்றும் ராகா வானொலியில் சிறப்பு இந்தியப் புத்தாண்டு நிகழ்ச்சிகளை அனைத்து மலேசியர்களும் எதிர்பார்க்கலாம்.
ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களுடன் இந்தியப் புத்தாண்டை வரவேற்கும் தருணத்தில், தமிழ், மலையாளம், பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டெலிமூவிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வடிவங்கள் மற்றும் மொழிகளில் பல வகையான உள்ளூர் உள்ளடக்கங்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஜூன் 3 முதல் உள்ளூர்மயமாக்கப்பட்டப் பிரபலமான அமெரிக்க விளையாட்டு நிகழ்ச்சியானப் ‘பேமிலி பியூட் மலேசியா தமிழ்’-இன் முதல் ஒளிபரப்பை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். அல்ட்ரா மற்றும் அல்டி பெட்டிகள் வழியாக டிவியில் கிடைக்கப்பெறும் ZEE5 செயலியில் அசல் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், ஜீ நெட்வொர்க் அலைவரிசைகளின் மிகவும் விரும்பப்படும் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றைப் பாலிவுட் மற்றும் கோலிவுட் இரசிகர்கள் கண்டு மகிழலாம் என்பதைப் பகிர்ந்துக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி கூறுவதுடன் புத்தாண்டுகளைக் கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம், சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள், விஷு அஷம்சகள் மற்றும் வைசாக்கி தியான் லக் லக் வதையான்” எனத் தெரிவித்தார்.
உள்ளூர் முன்னணியில், வாடிக்கையாளர்கள் தமிழ் குடும்ப நாடக டெலிமூவி மாயா, கலை விழாவின் காட்சி சந்தானன் பெஸ்திவல் ஓவ் ஆட்ஸ், உரை நிகழ்ச்சி சித்திரை சிறப்பு ராசிபலன் 2023, குடும்ப நாடகத் தொடர், சிங்கப்பெண் மற்றும் மலையாளக் குடும்பத் திரில்லர் டெலிமூவியான நிகூடம் ஆகியவற்றை ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் கண்டு இரசிக்கலாம். மேலும், விளையாட்டு நிகழ்ச்சிகள் தெரியுமா மற்றும் பசங்க சீரிஸ் புத்தாண்டு ஸ்பெஷல், இசை நிகழ்ச்சி பத்மஸ்ரீ ஹரிஹரன் லைவ் இன் புத்ராஜெயா, நகைச்சுவை நாடகத் தொடர் பசங்க மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சி, பேமிலி பியூட் மலேசியா தமிழ் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) -இல் கண்டுக் களிக்கலாம். அதுமட்டுமின்றி, இக் பரிவார் எனும் பஞ்சாபி குடும்ப நகைச்சுவை டெலிமூவியை வாடிக்கையாளர்கள் BollyOne HD (அலைவரிசை 251)-இல் கண்டு மகிழலாம்.
முதல் ஒளிபரப்புக் காணும் இந்தியா நிகழ்ச்சிகளையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்:
• ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223)-இல் விருதுகள் நிகழ்ச்சி ஜீ கோல்டன் மொமெண்ட்ஸ் விருதுகள் 2023 மற்றும் விவாத நிகழ்ச்சி சிறப்பு பட்டிமன்றம்.
• ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 203)-இல் குடும்ப நாடகத் திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன்.
• ஆஸ்ட்ரோ தங்கத்திரை (அலைவரிசை 241)-இல் காதல் நாடகத் திரைப்படம் லவ் டுடே.
• ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் இசை நிகழ்ச்சிகள் தேவா தி தேவா மற்றும் தமிழிசை பயணம் மற்றும் புராணத் திரைப்படம் கர்ணன்.
• ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) -இல் திரில்லர் திரைப்படம் டிரைவர் ஜமுனா, வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படம் ராக்கெட்ரி: தி நம்பி இபேக் மற்றும் நாடக ஆக்ஷன் திரைப்படம் காந்தாரா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, கிராண்ட்ஸ்டார் நைட்.
இந்தி, தமிழ், பெங்காலி, பஞ்சாபி மற்றும் பிற மொழிகள் உட்பட 18 மொழிகளில் (12 இந்திய மற்றும் 6 சர்வதேச மொழிகள்) உள்ளடக்கங்களை வழங்கும் தெற்காசிய உள்ளடக்கத்திற்கான உலகின் மிகப்பெரியத் தளம், ZEE5. இந்திய மற்றும் தெற்காசியப் பொழுதுபோக்கின் தீவிர இரசிகர்களுக்கு இது சரியானத் தளமாக அமைகிறது.
பிரபலத் திரைப்பட இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியத் தமிழ் நாடகம், தி கிரேட் இந்தியன் கிச்சன்; காதல்-நகைச்சுவை, மிடில் கிளாஸ் லவ்; நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தா இடம் பெற்ற இறுதி நகைச்சுவைத் திரைப்படமானக் கஞ்சூஸ் மகிச்சூஸ், மற்றும் சுனில் குரோவர், சப்னா பப்பி மற்றும் நிகில் விஜய் ஆகியோர் நடித்த யுனைடெட் கச்சே உட்பட தங்களுக்குப் பிடித்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஸ்ட்ரீமிங் செய்யவும் பிரத்தியேகமான உள்ளடக்கம் மற்றும் விளம்பரமில்லா அனுபவத்திற்காகவும் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 10 ரிங்கிட் 60 காசு (RRP 14 ரிங்கிட் 90 காசு) சந்தாவில் ZEE5 பிரீமியத்தைச் சேர்க்கலாம்.
நியூ யர் மகா சங்கமம் எனும் ஆஸ்ட்ரோ உலகம், மின்னியல் தளத்தின் முதல் விளையாட்டு நிகழ்ச்சியை அனைத்து மலேசியர்களும் ஸ்ட்ரீம் செய்யலாம்.
ராகா வானொலியில்…
வானொலி முன்னணியில், 10 முதல் 13 ஏப்ரல் 2023 வரை மிஸ்டர் & மிஸ் ராகா எனும் மெய்நிகர் அழகுப் போட்டியின் தங்களுக்குப் பிடித்தப் போட்டியாளர்களுக்கு ராகா அகப்பக்கம் வழியாக வாக்களிக்க அனைத்து மலேசியர்களையும் ராகா அழைக்கிறது. இரண்டு வெற்றியாளர்கள் ராகாவின் தளபதி (மிஸ்டர்) மற்றும் ராகாவின் அப்சரா (மிஸ்) என முடிசூட்டப்படுவார்கள், தலா 3,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.