Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வானொலி அலைவரிசைகளில் ‘ஸ்பாட் தி கார்’ போட்டி – ரொக்கமாக 5,500 ரிங்கிட்டில் ஒரு...

ஆஸ்ட்ரோ வானொலி அலைவரிசைகளில் ‘ஸ்பாட் தி கார்’ போட்டி – ரொக்கமாக 5,500 ரிங்கிட்டில் ஒரு பங்கை வெல்லுங்கள்

827
0
SHARE
Ad

*ஆஸ்ட்ரோ வானொலியில் ‘ஸ்பாட் தி கார்’ போட்டியின் மூலம் ரொக்கமாக 5,500-ரிங்கிடில் ஒரு பங்கை வெல்லுங்கள்

*காரைக் கண்டுப்பிடித்து இப்போதிலிருந்து ஏப்ரல் 16, 2023 வரை ரொக்கப் பரிசை வெல்லுங்கள்

ஆஸ்ட்ரோ வானொலியில் ‘ஸ்பாட் தி கார்’ போட்டியைப் பற்றிய விவரங்கள்:

#TamilSchoolmychoice

• ராகா, Hitz FM, Mix FM, Lite FM, ERA, SINAR, GEGAR, ZAYAN, MY, MELODY மற்றும் GOXUAN ஆகிய ஆஸ்ட்ரோ வானொலி பிராண்ட் சின்னங்களால் மூடப்பட்டிருக்கும் காரைக் கண்டுப்பிடித்து ரொக்கமாக 5,500-ரிங்கிட்டில் ஒரு பங்கை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் வாய்ப்பைப் பெற, இப்போதிலிருந்து ஏப்ரல் 16, 2023 வரை ‘ஸ்பாட் தி கார்’ போட்டியில் பங்கேற்க அனைத்து மலேசியர்களையும் ஆஸ்ட்ரோ வானொலி அழைக்கிறது.

• தீபகற்ப மலேசியா பகுதிகளில் காரைக் கண்டு பிடித்த பிறகு, பங்கேற்பாளர்கள் பின்வருபவற்றைச் செய்ய வேண்டும்:

o மூடப்பட்டக் காருடன் தங்களைப் புகைப்படம் எடுத்து, அப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற வேண்டும். பங்கேற்கும் அனைத்து கணக்குகளும் ‘பொது’ என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

o பங்கேற்பாளர்கள் கண்டுபிடித்தக் காரில் உள்ள ஆஸ்ட்ரோ வானொலி பிராண்டுடன் பொருந்தக்கூடியக் குறிப்பிட்ட ஹேஷ்டேக்குடன் ஒரு ஆக்கப்பூர்வமானச் சுலோகத்தையும் சேர்க்க வேண்டும். பயன்படுத்த வேண்டிய ஹேஷ்டேக்குகளின் பட்டியல் பின்வருமாறு:

i. தமிழ் வானொலி பிராண்டு: #RAAGASpotTheCar

ii. ஆங்கில வானொலி பிராண்டுகள்: #HITZSpotTheCar, #MIXSpotTheCar, #LITESpotTheCar

iii. மலாய் வானொலி பிராண்டுகள்: #CariKeretaERA, #CariKeretaSINAR, #CariKeretaGEGAR, #CariKeretaZAYAN

iv. சீன வானொலி பிராண்டுகள்: #MYSpotTheCar, #MELODYSpotTheCar, #GOXUANSpotTheCar

• அனைத்து 11 ஆஸ்ட்ரோ வானொலி பிராண்டுகளில், ஒவ்வொரு பிராண்டிலிருந்தும் ஒரு வெற்றியாளர், 500 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வார் மற்றும் வெற்றியாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.

• பங்கேற்பாளர்கள் ‘ஸ்பாட் தி கார்’ பிரச்சாரத்திற்காகப் பல பதிவுகளைச் சமர்ப்பிக்கலாம். இருப்பினும் 11 ஆஸ்ட்ரோ வானொலி பிராண்டுகளில், ஒவ்வொரு பிராண்டிலிருந்தும் சிறந்தப் புகைப்படம் மற்றும் ஆக்கப்பூர்வமானச் சுலோகத்தைப் பதிவிட்ட ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்

• மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ வானொலி பிராண்டுகளின் இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தை வலம் வாருங்கள்.

பின்தொடர்க:

syok.my
fb.com/syok
instagram.com/syok