Home One Line P2 அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமார் விலகல்

அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமார் விலகல்

758
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

வாக்கு எண்ணிக்கை மே 2- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் பட்டியல் என அனைத்து கட்சிகளும் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகிவிட்டதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் இணைந்து ஜெயலலிதா பிறந்தநாளன்று சசிகலாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.