Home One Line P2 ஏப்ரல் 6 : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை மே 2

ஏப்ரல் 6 : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை மே 2

728
0
SHARE
Ad

புதுடில்லி : மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

அதன்படி தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும்  ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும். அதற்கான வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாள் மார்ச் 19 ஆகும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற இறுதி நாள் மார்ச் 20.

மார்ச் 22 வேட்புமனுக்கள் இறுதி செய்யப்படும்.

#TamilSchoolmychoice

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஏப்ரல் 6-ஆம் தேதியே நடைபெறும்.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து 5 மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் மே – 2 ஆம் தேதி வெளியாகும்.

தமிழ் நாடு சட்டமன்றத்தின் பதவிக் காலம் எதிர்வரும் மே 24-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

தமிழ் நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்களுக்கு 88,936 வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு வாக்களிப்பு மையத்தில் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

தேர்தல் தேதிகள் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல்கள் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலாக்கத்திற்கு வந்துள்ளன.

தமிழ் நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்

தமிழ் நாடு தவிர, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

அதற்கான தேதிகள் பின்வருமாறு:

புதுச்சேரி – (30 தொகுதிகள்) – 6 ஏப்ரல் வாக்களிப்பு

கேரளா – (140 தொகுதிகள்) – 6 ஏப்ரல் வாக்களிப்பு

மேற்கு வங்காளம் – (140 தொகுதிகள்) – 3 கட்டங்களாக நடைபெறும்.

அசாம் – (126 தொகுதிகள்) – 27 மார்ச் , 1 ஏப்ரல், ஏப்ரல் 6 (3 கட்டங்களாக நடைபெறும்)