கோலாலம்பூர்: பார்மானியாகா பெர்ஹாட் அதன் முதல் சினோவாக் கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளது.
இது தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் (என்.பி.ஆர்.ஏ) தேவைக்கேற்ப, பொது மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த செயல்முறை நிலுவையில் உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் சுல்கர்னைன் முகமட் யூசோப் கூறினார்.
சீன மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 300,000 தடுப்பூசிகள் இன்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன.
இது தேசிய நோய்த்தடுப்பு திட்டத்திற்கான அதன் உயர் தொழில்நுட்ப ஆலையில் பார்மனியாகாவால் நிரப்பப்பட்டும் என்று அவர் கூறினார்.
தயாரிப்பு சரிபார்ப்பு திங்கட்கிழமை தொடங்கி 12 நாட்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.