வாஷிங்டன்: சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி 2018- இல் கொலை செய்ய சவுதி இளவரசர் முகமட் பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.
பைடன் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், கஷோகியை பிடிக்க அல்லது கொல்ல ஒரு திட்டத்திற்கு இளவரசர் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை “எதிர்மறையானது, பொய் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று சவுதி அரேபியா நிராகரித்தது.
இளவரசர் முகமட், இந்த கொலையில் எந்தப் பங்கும் கொண்டிருக்கவில்லை என்று அது மறுத்துள்ளது.
துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்திற்குச் சென்றபோது கஷோகி கொல்லப்பட்டார்.