Home நாடு லகாட் டத்து அருகே அபு சயாப் தீவிரவாதி சுடப்பட்டான்!

லகாட் டத்து அருகே அபு சயாப் தீவிரவாதி சுடப்பட்டான்!

1013
0
SHARE
Ad

lahaddatushootoutகோத்தா கினபாலு – இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் லகாட் டத்து அருகேயுள்ள புலாவ் கந்தோங் காலுங்கானில், அபு சயாப் இயக்கத்தைச் சேர்ந்த அபு பலியாக் அல்லது கமானேர் பலியாக் என்ற தீவிரவாதி, மலேசியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் லகாட் டத்து, குனாக் ஆகிய கடற்பகுதிகளில் பல்வேறு கடற்கொள்ளைகளில் அபு பலியாக் ஈடுபட்டிருப்பதாக சபா காவல்துறை ஆணையர் டத்தோ ரம்லி டின் சையத் தெரிவித்திருக்கிறார்.